sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

காலாவதியான மருந்துகளை என்ன செய்வது?

/

காலாவதியான மருந்துகளை என்ன செய்வது?

காலாவதியான மருந்துகளை என்ன செய்வது?

காலாவதியான மருந்துகளை என்ன செய்வது?


PUBLISHED ON : பிப் 15, 2026

Google News

PUBLISHED ON : பிப் 15, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டில் மருந்துப் பெட்டியில் இருக்கும் மருந்துகளின் காலாவதி தேதியை, எப்போதாவது சரி பார்த்திருக்கிறீர்களா?

அப்படியே காலாவதியான மருந்துகள் இருந்தால், என்ன செய்வீர்கள்?

பலர், அப்படியே குப்பையில் போட்டு விடுவர். அப்படி செய்வதை முதலில் நிறுத்துங்கள். காரணம், இது சுற்றுச்சூழல், விலங்குகள், குழந்தைகள் மற்றும் சமூகம் என, அனைவரையும் பாதிக்கும் ஆபத்தான செயலாகும்.

காலாவதி மருந்து ஏன் ஆபத்து தெரியுமா? அது, தன் வீரியத்தை இழந்து, செயலிழந்து போகும். செயலிழந்த மருந்தை, 'ஆன்டிபயாடிக்' மருந்தாக எடுத்தால், நோய் மோசமாகும்.

காலாவதியான சில மருந்துகள், நஞ்சாக மாறும். அவை, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றை பாதிக்கும்.

காலாவதியான திரவ மருந்துகளில், பாக்டீரியா வளரும். இதனால், புதிய நோய்கள் வரலாம்.

அடுத்து, காலாவதியான மருந்துகளை குப்பையில் போட்டால் என்னவாகும் தெரியுமா?

துாய்மைப் பணியாளர்கள் கையில் பட நேரலாம். அவர்களுக்குப் புண்ணோ, காயமோ இருந்தால், குப்பையிலிருந்து அவற்றை எடுக்கும் போது அவர்கள் கைகளில் காலாவதியான மருந்துகள் பட்டு பாதிப்படைய வாய்ப்பு உண்டு.

அதே போல்,தெருவில் கீழே வீசியெறியும் மாத்திரைகளை, அங்கு விளையாடும் குழந்தைகள், மிட்டாய் என்று நினைத்து சாப்பிடலாம். நாய்கள் மற்றும் பசுக்கள் விழுங்கி உயிரிழக்கலாம்.

அதோடு, மழையில் மாத்திரைகள் கரைந்து நிலத்தடி நீர் மாசுபடும். நீர்நிலைகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் பாதிப்படையும். இதைவிடக் கொடுமையானது, குப்பையில் இருந்து எடுத்த காலாவதியான மருந்துகளை, புதிய தேதி போட்டு கள்ளச் சந்தையில் விற்பதும் ஆங்காங்கு நடந்து வருகிறது. இது, அப்பாவிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்திய அரசின் கீழ் இயங்கும், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, இதுபற்றி தெளிவான வழிகாட்டலைக் கொடுத்துள்ளது.

காலாவதியான மருந்துகளை அப்புறப்படுத்த சரியான வழி என்ன? இதற்கு, இரு முறைகள் உண்டு.

முதலாவது முறை, வலி நிவாரணி மருந்துகள், பாட்டிலில் உள்ள இருமல் மருந்து, மாத்திரைகள் போன்ற, சில சக்தி வாய்ந்த மருந்துகளை கழிவறையில், உறையிலிருந்து பிரித்து எடுத்த மாத்திரைகளை மட்டும் போட்டு மற்றும் பாட்டிலில் உள்ள மருந்துகளை ஊற்றி, 'ப்ளஷ்' செய்யுங்கள்.

இரண்டாவது முறை, எல்லா மருந்து, மாத்திரைகளையும் பிரித்து, பிளாஸ்டிக் பையில் போட்டு இறுக மூடி, அருகே உள்ள ஏதாவது மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுகளுக்கான குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள்.

காலாவதியான மருந்துகள் வீட்டில் சேராமல் தவிர்க்க, தேவையான அளவு மட்டும் வாங்குங்கள். ஆறு மாதத்துக்கு ஒருமுறை மருந்து பெட்டியைச் சரி பாருங்கள். சந்தேகம் இருந்தால், மருந்தகத்தில் கேளுங்கள்.

மருந்து வாங்குவதில் காட்டும் அக்கறையை, அதை அழிப்பதிலும் காட்டுங்கள். அப்போது தான், உங்கள் குடும்பமும், சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக இருக்கும்.

- எம். முகுந்த்






      Dinamalar
      Follow us