PUBLISHED ON : ஜூலை 19, 2026

அ நிறம் | அளவு
பல நுாற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே, ஐரோப்பா நாடுகளில் பெண்கள், தீயணைப்பு துறையில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். கடந்த, 1815ல், அமெரிக்காவில் ஆரம்பித்த தீயணைப்பு துறையின் முதல் பெண் அதிகாரியாக, மோளி வில்லியம்ஸ் என்பவர் இடம் பெற்றார்.
கேரளம் மாநிலத்தில், 2020ல் இருந்து, பெண்களை தீயணைப்பு படை பிரிவில் பணியமர்த்தினர். இங்கு செயல்பட்டு வரும், பெண்கள் தீயணைப்பு படையினரை ஆரம்பத்தில், 'பயர் வுமன்' என்று அழைத்தனர். தற்போது மழை காலத்தில் மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருவதால், அவர்களை, 'பயர் அண்டு ரெஸ்கியூ ஆபீசர்ஸ்' என, அழைக்கின்றனர்.
பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் சர்வீஸ் அகாடமி ஒன்றும் கேரளம் மாநிலம், திருச்சூரில் இயங்கி வருகிறது.
- ஜோல்னாபையன்
