/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
நிலக்கரி நிறுவனத்தில் 1101 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
/
நிலக்கரி நிறுவனத்தில் 1101 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
நிலக்கரி நிறுவனத்தில் 1101 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
நிலக்கரி நிறுவனத்தில் 1101 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
PUBLISHED ON : அக் 14, 2025

மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிட்டர், டர்னர், மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், பிளம்பர், ஸ்டெனோ, வெல்டர் பிரிவுகளில் டிரேடு அப்ரென்டிஸ் 787, வணிகவியல், கம்ப்யூட்டர், பி.பி.ஏ., வேதியியல், நர்சிங் பிரிவுகளில் 314 என மொத்தம் 1101 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பட்டப்படிப்பு.
வயது: 1.4.2007க்குள் பிறந்திருக்க வேண்டும்.
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,019/ 12,524
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பொது மேலாளர், கற்றல் மேம்பாட்டு மையம், என்.எல்.சி இந்தியா நிறுவனம், வட்டம் -20, நெய்வேலி - 607 803.
கடைசிநாள்: 21.10.2025
விவரங்களுக்கு: nlcindia.in