PUBLISHED ON : ஆக 26, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் (ஜி.எஸ்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேனேஜ்மென்ட் டிரைனி பிரிவில் மெக்கானிக்கல் 9, எலக்ட்ரிக்கல் 5, எலக்ட்ரானிக்ஸ் 2, நிதி 2, ரோபோட்டிக்ஸ் 2, நேவல் ஆர்க்கிடெக் 12 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-28 (24.9.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.9.2025
விவரங்களுக்கு: goashipyard.in