PUBLISHED ON : ஜூலை 28, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் என்.எம். டி. சி., இரும்பு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எக்சிகியூட்டிவ் டிரைனி பிரிவில் மெக்கானிக்கல் 51, எலக்ட்ரிக்கல் 22, நிதி 7, கெமிக்கல் 4, சிவில் 3, கம்ப்யூட்டர் 3, எச்.ஆர்., 3 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., / சி.ஏ.,
வயது: 18-27 (11.8.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 11.8.2026
விவரங்களுக்கு: nmdcetr.formflix.org
