/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நெற்பயிர் நிற மாறுதலை கட்டுப்படுத்த ஆலோசனை
/
நெற்பயிர் நிற மாறுதலை கட்டுப்படுத்த ஆலோசனை
PUBLISHED ON : அக் 29, 2025

நெற்பயிர் நிற மாறுதலை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் செ.சுதாஷா கூறியதாவது:
சம்பா பருவத்தில், சாகுபடி செய்த நெற்பயிர் பாதிக்காமல் இருக்க, வயலில் தேங்கும் மழைநீரை விவசாயிகள் வெட்டி எடுத்து விடுவார்கள். இதனால், மண்ணில் இருக்கும் ஊட்டசத்துக்கள் மழைநீருடன் வெளியேறி, நெற்பயிர் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும்.
இதை தவிர்க்க, வயலை சுற்றிலும் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி தண்ணீரை வெளியேற்ற வேண்டும். நெற்பயிருக்கு காற்றோட்டம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
மழை விட்ட பின், ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 17 கிலோ பொட்டாஷ் உரத்துடன், 4 கிலோ ஊற வைத்து, வேப்பம் புண்ணாக்கு கலந்து போட வேண்டும்.
இதுதவிர, 1 கிலோ ஜிங்க்சல்பேட், 2 கிலோ யூரியா உரத்தை, 200 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கலாம்.
கதிர் எடுக்கும் நெற்பயிருக்கு, 2 கிராம் புரப்பிகோன சோல், 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: செ.சுதாஷா, 97910 15355

