PUBLISHED ON : டிச 31, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலை மண்ணில், கொடி உருளை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமான நிலம் மலை மண் சார்ந்த செம்மண் நிலமாகும். இதில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், கொடி உருளை சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் மலை மண்ணின் சீதோஷன நிலை தாங்கி வளர்க்கிறது. இது, படரும் தன்மை இருப்பதால், அதிக மகசூல் பெற முடியும்.
குறிப்பாக, மாடி தோட்டம் மற்றும் விளைநிலங்களில் சாகுபடி செய்து நல்ல மகசூல் ஈட்டலாம். நாற்று உற்பத்தி செய்து, செடிகளாகவும் விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.வெங்கடபதி
93829 61000

