PUBLISHED ON : ஆக 20, 2025

மலை மண்ணில் பாக்கு சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:
மலை மண் சார்ந்த செம்மண் நிலத்தில், குளிர் பிரதேசங்களில் விளையும் பழ மரங்களை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், ஊட்டி, கொடைக்கானல், தேனி ஆகிய மலை பகுதிகளில் விளையும், பாக்கு மரங்களை சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் மலை மண்ணுக்கு, சீதோஷ்ண நிலை தாங்கி வளர்கிறது. இன்னமும், மகசூல் எடுக்கவில்லை. நீர் மற்றும் உரம் நிர்வாகம் முறையாக கையாண்டால், பாக்கு சாகுபடியில் நல்ல மகசூல் பெறலாம்.
மேலும், மகசூலுக்கு பின் தரம் பிரிப்பது, சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு, விவசாயிகள் விற்பனை செய்தால், பாக்கு சாகுபடியில் நல்ல வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:கே.வெங்கடபதி,
93829 61000.