/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கணிசமான வருவாய்க்கு விசிறி காளான்
/
கணிசமான வருவாய்க்கு விசிறி காளான்
PUBLISHED ON : அக் 29, 2025

விசிறி காளான் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.மாதவி கூறியதாவது:
சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். தனி கொட்டகை அமைத்து, மொட்டுக் காளான், சிப்பிக் காளான், பால் நிற வெள்ளை காளான் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், விசிறி காளான் சாகுபடி செய்துள்ளேன். அதற்கேற்ப தட்ப வெப்ப நிலை இருக்கும் வகையில், கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளேன்.
இந்த காளான் அருமையாக பூத்துள்ளது. ஒவ்வொரு காளான் பைகளில் இருந்து, கணிசமான விசிறி காளான்களை அறுவடை செய்கிறேன்.
வீட்டு தேவைக்கு போக, வெளி சந்தையில் விற்பனை செய்கிறேன். அதிக வரவேற்பு இருப்பதால், கணிசமான வருவாய் கிடைக்கிறது.
அறுவடைக்கு முன் சுழற்சி முறையில் காளான் சாகுபடி செய்வதால், தொடர் வருவாய் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.மாதவி, 97910 82317

