/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
குறுகிய கால மகசூலுக்கு கிள்ளிகுளம் சிப்பி காளான்
/
குறுகிய கால மகசூலுக்கு கிள்ளிகுளம் சிப்பி காளான்
PUBLISHED ON : செப் 03, 2025

கிள்ளிகுளம்: ரக சிப்பி காளான் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், கிள்ளிகுளம்- ரக சிப்பி காளான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ரக காளான், 12வது நாளில் மொட்டு விட துவங்கி விடும். காளான் காம்புகள் இன்றி, படரும் தன்மை உடையது.
வாரத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். ஒரு முறை விதைத்தால், மூன்று முறை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு காளான் படுகையில் இருந்து, 200 கிராம் வரையில் அறுவடை செய்யலாம்.
பிற ரக காளான்கள், 21வது நாளில் மொட்டு விடும். ஒரு முறை அறுவ டை செய்தால், அடுத்த அறுவடைக்கு ஒரு மாதம் இடைவெளி தேவை ப்படும்.
இந்த காளான், குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயாராகும். அடுத்த அறுவடையும், குறுகிய காலத்தில் செ ய்துவிடலாம்.
குறுகிய கால மகசூலுடன், அதிக சுவையுடன் இருக்கும். இதில், நார்ச்சத்து, புரதம், தாதுக்கள், வைட்டமின் உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:முனைவர் செ.சுதாஷா,
97910 15355.