/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கூடுதல் மகசூலுக்கு இளஞ்சிவப்பு ஸ்ட்ராபெர்ரி கொய்யா
/
கூடுதல் மகசூலுக்கு இளஞ்சிவப்பு ஸ்ட்ராபெர்ரி கொய்யா
கூடுதல் மகசூலுக்கு இளஞ்சிவப்பு ஸ்ட்ராபெர்ரி கொய்யா
கூடுதல் மகசூலுக்கு இளஞ்சிவப்பு ஸ்ட்ராபெர்ரி கொய்யா
PUBLISHED ON : டிச 03, 2025

இளஞ்சிவப்பு நிற ஸ்ட்ரா பெர்ரி கொய்யா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்து செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறிய தாவது:
குளிர் மற்றும் வறட்சி யான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை, நம் ஊர் மண்ணில் சாகுபடி செய்யலாம். இதில், ஸ்ட்ரா பெர்ரி ரக கொய்யா ஒன்றாகும். மஞ்சள், இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் கொய்யா பழங்கள் உள்ளன.
மாடித் தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும், இளஞ்சிவப்பு நிற ஸ்ட்ரா பெர்ரி கொய்யா சாகுபடி செய்யலாம். இதன் வாயிலாக வீட்டு தேவைக்கு போக, கணிசமான வருவாய் ஈட்டலாம்.
குறிப்பாக, இளஞ் சிவப்பு நிற ஸ்ட்ராபெர்ரி ரக கொய்யா, பிற ரக கொய்யா பழங்களை போல பெரிதாக இல்லாமல், நெல்லிக்காய் அளவிற்கு சிறிதாக இருக்கும்.
கொத்துக் கொத்தாக காய்க்கும் தன்மை உடையது. இந்த கொய்யா பழம் சிறிதாக இருந்தாலும், அவ்வளவும் மருத்துவ குணம் நிறைந்த பழமாக இருக்கும்.
அதிக சுவையுடைய இளஞ்சிவப்பு நிற ஸ்ட்ரா பெர்ரி ரக கொய்யாவை, நம்மூரில் சாகுபடி செய்தால், கூடுதல் பணம் கொடுத்து வாங்கவும் பொது மக்கள் தயக்கம் காட்டமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்98419 86400

