/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக விளைச்சலுக்கு பி.எல்.ஆர்., - 1 ரக பலா
/
அதிக விளைச்சலுக்கு பி.எல்.ஆர்., - 1 ரக பலா
PUBLISHED ON : நவ 26, 2025

பி .எல்.ஆர்.,- - 1 ரக பலாப்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும் பலவித பழங்கள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், பண்ரூட்டி அடுத்த பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடித்த பி.எல்.ஆர்.,- - 1 ரக பலாப்பழம் முக்கியமானது. இது களர், உவர் நிலத்தை தவிர, சத்து நிறைந்த அனைத்து விதமான மண்ணிலும் அருமையாக வளரும் தன்மை உடையது.
குறிப்பாக, கோடை சீசனுக்கு பலா பழங்கள் அதிகமாக கிடைக்கும். இந்த பி.எல்.ஆர்-., - 1 ரக பலாப்பழம், ஓராண்டில் இருமுறை மகசூல் கொடுக்கும் தன்மை உடையது.
ஒவ்வொரு பலா மரத்திலும், 70 பழங்களுக்கு குறையாமல் உயர் விளைச்சல் கொடுக்கும் ரகம். ஒவ்வொரு பழமும், 8 முதல், 10 கிலோ எடையில் கிடைக்கும். சீசன் இல்லாத நேரங்களில் பலா பழங்கள் கிடைக்கும்போது, நல்ல விலையும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400.

