தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/கம்போடியா நாட்டு திராட்சை மலை மண்ணில் சாத்தியம்

கம்போடியா நாட்டு திராட்சை மலை மண்ணில் சாத்தியம்

கம்போடியா நாட்டு திராட்சை மலை மண்ணில் சாத்தியம்


PUBLISHED ON : அக் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கம்போடியா நாட்டு திராட்சை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொத் துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங் கடபதி கூறியதாவது:

மலை மண் சார்ந்த செம்மண் நிலத்தில், டிராகன் பழம், முள் சீதா உள்ளிட்ட பல வித பழங் களை சாகுபடி செய்துள் ளேன். அந்த வரிசையில், பந்தல் முறையில் கம்போ டியா நாட்டில் விளையும் சிறிய ரக திராட்சை சாகுபடி செய்து உள்ளேன்.

இது, ஒட்டு ரக செடியா கும். இரு ஆண்டிற்கு பின் மகசூல் பெறலாம். இந்த திராட்சை பழங்களில், விதைகள் தடிமனாகவும், பழத்தின் சதை குறைவாக வும் இருக்கிறது.

இந்த திராட்சை கொடி பந்தலில் படர்வதை காட் டிலும், மரங்களின் மீது படர்வது தான் வேகமாக இருக்கிறது. ஆண்டுக்கு, ஒரு முறை மட்டுமே பழ மகசூல் பெற முடியும்.

காய்கள் பச்சை நிறத்தி லும், பழமாகும் போது, கருப்பு நிறத்திலும் திராட்சை இருக்கும். இந்த பழம், புளிப்பு சுவையுடன் இருப்பதால், உடலில் ரத் தத்தை சுத்திகரிப்பதில் சிறப்பாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: கே.வெங்கடபதி,

93829 61000.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us