/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
களிமண் நிலத்திலும் சிவப்பு நிற மாதுளை சாகுபடி
/
களிமண் நிலத்திலும் சிவப்பு நிற மாதுளை சாகுபடி
PUBLISHED ON : அக் 15, 2025

களிமண் நிலத்தில், சிவப்பு நிற மாதுளை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வே.பரசுராமன் கூறியதாவது:
விவசாய நிலத்தில், 30 சென்ட் நிலத்தை தேர்வு செய்து, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காதவாறு மண் கொட்டி நிலத்தை உயரப்படுத்தியுள்ளேன். இந்த நிலத்தில், காய்கறி செடிகள், மா, தென்னை, கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழ மரங்களை சாகுபடி செய்துள்ளேன்.அந்த வரிசையில், குளிர் பிரதேசங்களில் விளையும், சிவப்பு நிற மாதுளை சாகுபடி செய்துள்ளேன். நம்மூர் சிதோஷ்ண நிலைக்கு நன்றாக வளர்கின்றன.பொதுவாக, மாதுளை செடிகளில் ஒன்று, இரண்டு தான் மகசூல் கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் மகசூல் கொடுக்கும் போது, பழங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இந்த சிவப்பு நிற மாதுளை செடியில், காய்கள் காய்க்கும் போதே கொத்துக் கொத்தாக காய்க்கிறது. செடியின் உயரமும் குறைவாகவே உள்ளது.மகசூல் முடிந்த பின், செடிகளின் கிளைகளை வெட்டி விடுகிறோம். இன்னமும் கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:வே.பரசுராமன்,99521 23682.