/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மதிப்பு கூட்டிய பொருளாக சீயக்காய் பவுடர் விற்பனை
/
மதிப்பு கூட்டிய பொருளாக சீயக்காய் பவுடர் விற்பனை
PUBLISHED ON : அக் 15, 2025

சீயக்காய் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:
சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில் சீயக்காய் சாகுபடி செய்துள்ளேன்.
சீயக்காய் மரம், ஏழு ஆண்டுகளுக்கு பின் மகசூல் கொடுக்க துவங்கும். என் தோட்டத்தில் நட்டுள்ள சீயக்காய் மரங்கள், நான்கு ஆண்டுகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. இன்னும், மகசூல் பெற மூன்று ஆண்டுகள் உள்ளன.
மேலும், சீயக்காய் பவுடராக மதிப்பு கூட்டிய பொருளாகவும் மாற்றி விற்பனை செய்யலாம்.
சீயக்காய் இலை, காய்கள், பட்டை இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், சீயக்காயை சந்தைப்படுத்துவதில் சிரமம் இருக்காது.
இந்த மரங்கள் சாகுபடிக்கு நடுவே, நிழலில் வளரும் தன்மையுடைய விளைபொருட்களை சாகுபடி செய்து, வருவாய் ஈட்டலாம். ஏழு ஆண்டுகளுக்கு பின், சீயக்காய் மகசூல் கொடுக்கும்போது இரட்டிப்பு வருவாய்க்கு வழிவகுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.மாதவி,
97910 82317.