தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/மா மரங்களில் வாடல் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

மா மரங்களில் வாடல் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

மா மரங்களில் வாடல் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு


PUBLISHED ON : நவ 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மா மரங்களில் வாடல் நோயை கட்டுப்படுத்த கரைசல் தயாரிப் பது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:

தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றத்தால், பூஞ்சை காளான்களின் பெருக்கம் அதிகரித்து வருகின்றன. இதனால், மா மரங்களில், இலைகள் கருகி விடுகின்றன.

மா மரத்தின் தண்டு பகுதியை வெட்டி பார்க்கும் போது, திசுக்களின் நிற மாற்றம் ஏற்பட்டு, வாடல் நோய் பாதிப்பு தெளிவாக தெரிகிறது.

பாதிப்பு ஏற்பட்ட மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். வெட்டிய மரக்கிளையில், நோய் பாதிப்பை தடுக்கும், 'போர்டோ' பசை அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு பசையை தடவ வேண்டும்.

மரத்தின் வேர் பகுதியில், 2 கிராம் கார்பென்டாசிம், 1 லிட்டர் தண்ணீரில் கலந்து, மரத்தின் தடிமனுக்கு ஏற்ப, 15 லிட்டர் கரை சலை ஊற்ற வேண்டும். மேலும், 1 லிட்டர் தண்ணீரில், 2 மில்லி ஹெக்சாகோனசோலை கலந்து தெளிக்க வேண்டும். அதே போல, 15 நாட்கள் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது, மரங்களின் இழப்பை தடுத்து, மா சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.



- செ.சுதாஷா,

97910 15355.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us