/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வேங்கை இலை நிறம் மாறுதலை கட்டுப்படுத்த கரைசல்
/
வேங்கை இலை நிறம் மாறுதலை கட்டுப்படுத்த கரைசல்
PUBLISHED ON : அக் 15, 2025

வேங்கை மர சாகுபடியில், இலை நிறம் மாறுதலை கட்டுப்படுத்த கரைசல் தயாரிப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
நாற்று பண்ணைகளில், பதியன் போட்டிருக்கும் வேங்கை மரக்கன்றுகளில், இலைகளின் நிறம் மஞ்சளாக மாறும்.
இதற்கு, காரணம் சூரிய ஒளி நேரடியாக செடிகள் மீது படாதது; செடிகளின் அருகே தண்ணீர் தேங்குதல்; செடிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுதல்; சில நேரங்களில் மண்ணில் இருக்கும் காரத்தன்மை அதிகமாகும் போது, மஞ்சள் நிறத்திற்கு இலைகள் மாறிவிடும். சில மரக்கன்றுகள் பாதிக்கப்பட்டு, இறக்க நேரிடலாம்.
இதை தவிர்க்க, 5 கிராம் யூரியா,5 கிராம் இரும்பு சல்பேட், 5 கிராம் ஜிங்க் சல்பேட் மற்றும் ஒட்டு திரவத்தை கலக்கி, காலை மற்றும் மாலை நேரத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை இலைகள் மீது தெளிக்கலாம். 5 கிராம், நுண்ணுாட்ட கலவையை, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இதுதவிர, கையோலின் கிளே 5 கிராம், நுண்ணுாட்ட கலவை 5 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.
இவ்வாறு கலந்து தெளிக்கும் போது, வேங்கை மரக்கன்றுகள் தரமானதாகவும் வீரியத்துடனும் வளரும் தன்மை கொண்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,
97910 15355.