sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சோயா மொச்சை சாகுபடி

/

சோயா மொச்சை சாகுபடி

சோயா மொச்சை சாகுபடி

சோயா மொச்சை சாகுபடி


PUBLISHED ON : அக் 15, 2025

Google News

PUBLISHED ON : அக் 15, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்ணின் மட்குச்சத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும் வகையில் குறிப்பாக நெல்லுக்கு பயிர் சுழற்சி முறையில் சாகுபடிக்கேற்ற சிறந்த பயிர் சோயாமொச்சை. தனிப்பயிராகவும் கரும்பு, வாழை, மஞ்சள், பருத்தி, மரவள்ளி, மல்பெரி, தென்னையில் ஊடுபயிராகவும் சோயாமொச்சையை சாகுபடி செய்யலாம்.



சிறந்த ரகங்கள்


80 முதல் 110 நாட்களில் அறுவடை செய்யும் வகையில் பஞ்சாப் 1, ஜெ.எஸ் -335, கே.டி.எஸ் 726, டி.எஸ்.பி., 21, 34 ரகங்கள் தமிழக சாகுபடிக்கு ஏற்றது. தை (டிச., - மார்ச்), வைகாசி (ஏப்., - ஜூலை) , புரட்டாசிப்பட்டத்தில் (ஆக., - நவ., ) களர், உவர் நிலங்களைத் தவிர எல்லா வகையான மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம்.

விதையும், நேர்த்தியும்

பார் பிடித்து ஊன்றுவதற்கு ஏக்கருக்கு 25 கிலோ விதை தேவை. பாருக்கு பார் ஓரடி, செடிக்குச்செடி அரையடி இடைவெளி வேண்டும். ஏர் சாலில் விதைக்க 30 கிலோவும் புழுதி உழுது தெளிக்க 35 முதல் 40 கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் 'பெவிஸ்டின்' கலந்து விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் ரைசோபியம் ஜப்பானிகம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்கள் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்கவேண்டும்.



உரமேலாண்மை


ஏக்கருக்கு தழைச்சத்து 8 கிலோ, மணிச்சத்து 32 கிலோ, சாம்பல் சத்து 16 கிலோ தேவை. மணிச்சத்து (200 கிலோ சூப்பர் பாஸ்பேட்) முழுவதையும் அடியுரமாக கடைசி உழவில் இடவேண்டும். இத்துடன் 200 கிலோ ஜிப்சம் (கால்சியம் சல்பேட்) இடும்போது மண்ணின் பொலபொலப்புத்தன்மை அதிகமாகிறது. சோயா விதைத்த 30 நாட்களுக்குள் மேலுரமாக தழை, சாம்பல் சத்துக்களை இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

பயிர் வளர்ச்சியை பொறுத்து யூரியா 15 கிலோ முதல் 25 கிலோ வரை, பொட்டாஷ் 20 கிலோ முதல் 25 கிலோவரை இடலாம். 5 கிலோ யூரியாவுக்கு ஒரு கிலோ என்ற அளவில் வேப்பம் பிண்ணாக்கு இட்டால் தழைச்சத்து வீணாகாமல் பயிருக்கு முழுதாக கிடைக்கும்.

நீர் நிர்வாகம்

விதை முளைத்து களை எடுக்கும் வரை காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாய்ச்ச வேண்டும். மேலுரம் இட்டு பூப்பிடிக்கும் தருணம் முதல் காய் முதிர்ச்சியடையும் வரை 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சவேண்டும்.

பூப்பிடிக்கும் தருணத்தில் (30 முதல் 35 நாட்கள்) 2 சதவீதம் 10 நாட்கள் இடைவெளியில் காய் முதிர்ச்சியடையும் வரை டி.ஏ.பி. கரைசல் தெளிக்கவேண்டும். அல்லது நீரில் கரையக்கூடிய என்.பி.கே., (19:19:19) கரைசலை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் 10 நாட்கள் இடைவெளியில் சோயா செடிகள் நனையுமாறு தெளிக்கலாம். கரைசல் தெளிக்கும்போது நிலத்தில் ஈரம் இருக்க வேண்டும்.

களை நிர்வாகம்

உயிர் தண்ணீர் பாய்ச்சியவுடன் 3 நாட்களுக்குள் களை முளைக்கும் முன்பாக ஏக்கருக்கு 250 மில்லி 'ஆக்ஸிப்ளோரோபென்' அல்லது ஒன்றரை லிட்டர் 'அலோகுளோர்' களைக்கொல்லியை தெளிக்கவேண்டும். களை முளைத்தபின் 400 மில்லி 'இமேசிதபிர்' 10 சதவீத எஸ்.எல்., மற்றும் 250 மில்லி குவிஸ்லபோப் எதில்10 இ.சி., கலந்து தெளித்தால் அகல இலை, புல் வகை களைகள் கட்டுப்படுத்தப்படும். சோயா விதைத்து 15 முதல் 20 நாட்களுக்குள் நிலத்தில் ஈரம் இருக்கும் போது தெளிக்க வேண்டும்.

நுண்ணுாட்டச்சத்து குறைவாக உள்ள பகுதிகளில் முதன்முறையாக டி.ஏ.பி., கரைசல் தெளிக்கும் போது ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கிலோ நுண்ணுாட்டக்கலவை அல்லது திரவ வடிவிலான அரை லிட்டர் நுண்ணுாட்டக் கரைசல் கலந்து தெளிக்கலாம். இதனால் சோயா மணிகளின் எடையும் மகசூலும் அதிகரிக்கும்.

பயிர் பாதுகாப்பு

இலைசுருட்டுப்புழு தாக்குதல், கதிர் நாவாய்பூச்சியைக் கட்டுப்படுத்த 'குளோரான்ரானிலிப்ரோல்' 18.5 சதவீத (கோராஜன்) பூச்சிக்கொல்லியை ஏக்கருக்கு 60 மில்லி தெளிக்கலாம். தண்டு ஈக்களைக் கட்டுப்படுத்த இதே மருந்தை ஏக்கருக்கு 60 மில்லி அல்லது ஏக்கருக்கு 4 கிலோ குருணையை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பஞ்சு அஸ்வினியைக் கட்டுப்படுத்த 'இமிடோகுளோப்ரைட்'17.8 சதவீதம் ஏக்கருக்கு 60 முதல் 90 மில்லி அளவில் தெளிக்க வேண்டும். பொருளாதார சேதநிலைக்கு மேல் இருந்தால் மட்டுமே பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும்.

சோயா அறுவடை

அறுவடை தருணத்தில் இலைகள் மஞ்சளாகி பழுத்துக் கொட்ட ஆரம்பிக்கும் போது நிலமட்டத்திற்கு அரிவாள் கொண்டு பயிர்களை அறுக்கவேண்டும். வேரோடு பறிக்கக்கூடாது. ஒருநாள் மூட்டம் போட்டு, வெயிலில் உலர்த்தி டிராக்டர் கொண்டு தாம்பு ஓட்டியோ அல்லது நெல் கதிரடிக்கும் இயந்திரம் மூலமோ மணிகளைப் பிரிக்கலாம்.

சுத்தம் செய்து காய வைக்கப்பட்ட (10 சதவீதம் ஈரப்பதம்) சோயா மொச்சை தான் விற்பனைக்கு ஏற்றது.

-சேவியர் பால் ராஜ், ஆலோசகர்

ஏ.பி.டி., சோயா பிரிவு, கோவை

அலைபேசி: 94431 37338






      Dinamalar
      Follow us