/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சவுடு மண்ணில் விளையும் இலங்கை பலாப்பழம்
/
சவுடு மண்ணில் விளையும் இலங்கை பலாப்பழம்
PUBLISHED ON : செப் 03, 2025

சவுடு மண்ணில் விளையும் இலங்கை பலாப்பழம் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூ.இளையராஜா கூறியதாவது:
மணல் கலந்த சவுடு மண்ணில், மா, பலா, தென்னை, சவுக்கு உள்ளிட்ட பல விதமான பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், இலங்கை நாட்டில் விளையும் பலா மரங்களை நம்மூர் சவுடு மண்ணில் நட்டு பராமரித்து வருகிறேன்.
இந்த மண்ணுக்கு பலா மரம் நன்றாக வளர்கிறது. நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு, இயற்கை உயிர் உரங்களை தெளிக்க வேண்டும். அதற்கேற்ப, நீர் நிர்வாகத்தையும் கையாள வேண்டும்.
குறிப்பாக, பலாப்பழம் சீசன் முடிந்த பின்னும், மகசூல் கொடுக்கிறது. சீசன் இல்லாத நேரங்களில் பலாப்பழங்களுக்கு, கூடுதல் விலை கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பூ.இளையராஜா,
97515 64333.