/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
இரட்டிப்பு வருவாய்க்கு வெல்வெட் பீன்ஸ் சாகுபடி
/
இரட்டிப்பு வருவாய்க்கு வெல்வெட் பீன்ஸ் சாகுபடி
PUBLISHED ON : டிச 03, 2025

வெல்வெட் பீன்ஸ் சாகுபடி குறித்து, காஞ்சி புரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:
மணல் கலந்த களி மண் நிலத்தில், கீரை, வேர்க் கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன்.
அனைத்து பயிர்களுக்கும் ரசாயன உரங்களை பயன்படுத்துவதில்லை. இயற்கை உரங்களை பயன்படுத்தி விளை பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், வெல்வெட் பீன்ஸ் சாகுபடி செய்துள்ளேன். இந்த பீன்ஸ் காய்கறியாகவும் சாப்பிடலாம்.
இந்த காய்கள் விற்பனையாகவில்லை எனில், முதிர்வடைந்த பின் விதைக்கு பயன்படுத்தலாம். இந்த விதைகளில் நிறைய மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், சந்தையில் விற்பனை செய்வது எளிதாக உள்ளது.
குறிப்பாக, ஆண்கள் தொடர்பான பலவித பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதால், சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. இந்த காய் சாகுபடி செய்வதை காட்டிலும், விற்பனை செய்யும் திறனை மேம் படுத்தும் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: சு.ரமேஷ், 81109 44475

