பருவநிலை மாற்றத்தில் காய்கறி சாகுபடி குறித்து பயிற்சி
பருவநிலை மாற்றத்தில் காய்கறி சாகுபடி குறித்து பயிற்சி
PUBLISHED ON : ஆக 05, 2026

அ நிறம் | அளவு
பருவநிலை மாற்றத்தில், காய்கறி சாகுபடி செய்வது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர்.திருமாவளவன் கூறியதாவது:
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், 'எல்-நினோ' என அழைக்கப்படும் பருவ நிலை மாற்றத்தில், காய்கறி சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி நாளை நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில், குறைந்த தண்ணீரை பயன்படுத்தி காய்கறி சாகுபடி செய்தல், விளைவித்த காய்கறிகளில் ஊறுகாய் தயாரித்தல், காய்கறிகளை பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
ஆர்.திருமாவளவன்,
99405 42371.
