அவரை சாகுபடியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த கரைசல்
அவரை சாகுபடியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த கரைசல்
PUBLISHED ON : செப் 08, 2026

அவரை சாகுபடியில், சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
கொடி அவரை மற்றும் செடி அவரை சாகுபடி என, இருவிதமான அவரைக்காய்களை சாகுபடி செய்து வருகிறேன். இதில், செடி அவரைக்காய் சாகுபடியில், சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிக அளவில் இருக்கும். இளம் தளிர்களை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலைகளில் ஆங்காங்கே ஓட்டை ஏற்படுத்தி, மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக, இலையின் அடிப்பகுதியில், தேன் போன்ற திரவத்தை செலுத்தி தாக்குதலை ஆரம் பிக்கும் இப்பூச்சிகள், இலை, செடி, காய் ஆகிய வற்றையும் தாக்கி, மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.
இதை தவிர்க்க, பாதிக்கப்பட்ட இலைகளை, செடிகளில் இருந்து அகற்ற வேண்டும். மேலும், ஏக்கருக்கு, 200 லிட்டர் தண்ணீரில், 250 மில்லி லிட்டர் 'அசாடிராக்டின்' எனும் வேப்ப மர விதைகளில் இருந்து பெறப்படும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை கலந்து தெளிக்க வேண்டும்.
அதாவது, 5 மில்லி லிட்டர் வேப்பெண்ணெய் மற்றும் சோப்பு திரவத்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, செடிகளுக்கு அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும். இதுதவிர, 5 மில்லி லிட்டர் 'இமிடாகுளோபிரிட்' எனும் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும். இவ்வாறு தடுப்பு முறைகளை கையாளும் போது, அவரைக்காய் சாகுபடியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: செ.சுதாஷா, 97910 15355
தொடர்புக்கு: செ.சுதாஷா, 97910 15355.
