PUBLISHED ON : நவ 25, 2026

வெள்ளை சோளம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம் காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் எம்.ராஜீவ்காந்தி கூறியதாவது:
என் நிலத்தில், வெள்ளை சோளம் நட்டுள்ளேன். மலை மண் நிலத்திற்கு எப்படி வரும் என, நினைத்தேன். இது, நன்றாக வளர்க்கிறது.
இந்த வெள்ளை சோளம், ஆடு, மாடுகளுக்கு தீனமாகவும் பயன்படுத்தலாம். அதில் கிடைக்கும் வெள்ளை சோளத்தை, நமக்கு உணவாக பயன்படுத்தி கொள்ளலாம்.
குறிப்பாக, 60 நாள் கழித்த பிறகே ஆடு, மாடுகளுக்கு வெள்ளை சோள தண்டு தீவனமாக வழங்க வேண்டும். இல்லை எனில், சோளப்பூ எடுத்த பிறகே ஆடு, மாடுகளுக்கு தீவனமாக அறுவடை செய்து வழங்கலாம். அறுவடைக்கு பிறகு உலர்த்தியும், தீவனமாக வழங்கலாம்.
வெள்ளை சோளம் சாகுபடி பொருத்தவரையில், ஆடு, மாடுகளுக்கு தீவனமும் கிடைக்கிறது. நமக்கு சத்து நிறைந்த மாவு, என, இரு விதங்களில் வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.ராஜீவ்காந்தி,
89402 22567.
