PUBLISHED ON : ஏப் 08, 2026

அ நிறம் | அளவு
கொடிவகை பயிர்களுக்கு புண்ணாக்கு கரைசல் பயன்படுத்தினால் கூடுதல் மகசூல் கிடைக்கும். தேங்காய் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, பருத்திக் கொட்டை புண்ணாக்கு மூன்றையும் தலா 5 கிலோ அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் டிரம் எடுத்து மூன்றையும் கொட்டி அதற்கு மேல் தண்ணீர் நிரம்பியிருக்கும் வரை 4 நாட்களுக்கு ஊறவிட வேண்டும்.
ஐந்தாவது நாளில் 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ சூடோமோனஸ் கலந்து மீண்டும் தண்ணீர் ஊற்றி கரைத்து 4 நாட்கள் ஊறவிட வேண்டும். கடைசியாக அதில் 2 லிட்டர் ஹியூமிக் அமில கரைசலை ஊற்றி கலக்கிய பின் காலை அல்லது மாலை வேளையில் செடிகளுக்கு தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
இதனால் வேர் வளர்ச்சி அதிகரித்து காய்கள் அதிகம் பிடித்து மகசூலும் அதிகரிக்கும்.
