தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வெவ்வேறு அளவுகளில் விற்பனை செய்வதால் நுகர்வோர் குழப்பம்

 வெவ்வேறு அளவுகளில் விற்பனை செய்வதால் நுகர்வோர் குழப்பம்

 வெவ்வேறு அளவுகளில் விற்பனை செய்வதால் நுகர்வோர் குழப்பம்


ADDED : ஏப் 30, 2026 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 12:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி, ஒரே அளவில் இல்லாமல் ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு அளவுகளில் சமையல் எண்ணெய்யை விற்பனை செய்வதால், நுகர்வோர் குழப்பம் அடைவதாகவும், மத்திய அரசு ஒரே மாதிரியான பேக்கிங் அளவுகளை கொண்டு வரவேண்டும் எனவும் இந்திய சோயாபீன் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.

இதுகுறித்து இச்சங்கம் மத்திய நுகர்வோர் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

போட்டியை சமாளிப்பதற்காக, எண்ணெய் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 19 வகையான அளவுகளில் எண்ணெயை விற்பனை செய்கின்றன. பெரும்பான்மையான பேக்கிங்கில் எண்ணெயின் எடை வேறுபடுகிறது. இந்த வழக்கம் சந்தைகளில் பெருவாரியாக உள்ளன. இப்படி வெவ்வேறு அளவுள்ள பேக்கிங்கால் நுகர்வோர் குழப்பமடைகின்றனர்.

பெரும்பாலான நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பேக்கிங் அளவுகள், நுகர்வோரை குழப்பமடைய செய்து உள்ளன. அதாவது 880 மி.லி., மற்றும் 910 மி.லி., என இரண்டு வகையான அளவுகளில் எண்ணெய் விற்பனையாகின்றன. இதில் 880 மி.லி., எண்ணெய் உள்ள பேக்கிங் விலை குறைவு என்பதால் நுகர்வோர் அதை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அது 1 லிட்டர் எண்ணெய் விலையைவிட அதிகமாக இருக்கிறது.

எனவே பேக்கிங் அளவுகளை ஒரே மாதிரி கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us