சாப்பாட்டுல உப்பு கூடுதலோ குறைவோ ஆனா கண்டிப்பா மைக்ரோ பிளாஸ்டிக் இருக்கு
சாப்பாட்டுல உப்பு கூடுதலோ குறைவோ ஆனா கண்டிப்பா மைக்ரோ பிளாஸ்டிக் இருக்கு
UPDATED : ஆக 14, 2024 02:44 AM
ADDED : ஆக 14, 2024 02:41 AM

புதுடில்லி: சாப்பாட்டுல உப்பு கூடுதலோ குறைவோ ஆனா கண்டிப்பா மைக்ரோ பிளாஸ்டிக் இருக்கு என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ்' என்ற தலைப்பில், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பான டாக்ஸிக்ஸ் லிங்க் நடத்திய ஆய்வில் இவை தெரியவந்துள்ளது.
ஆய்விற்காக 10 வகையான தூள் உப்பு,கல் உப்பு, மற்றும் 5 வகையான சர்க்கரை போன்றவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரை மாதிரிகளில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் அளவு 01.மிமீ முதல் 5 மி.மீ வரை இருந்துள்ளது.
மைக்ரோபிளாஸ்டிக்ஸின் மிக உயர்ந்த அளவு அயோடைஸ்டு உப்பில், பல வண்ண மெல்லிய இழைகள் வடிவத்தில் காணப்பட்டது.
டாக்ஸிக்ஸ் லிங்க் நிறுவனர்-இயக்குனர் ரவி அகர்வால் மற்றும் இணை இயக்குனர் சதீஷ் சின்ஹா கூறுகையில், 'எங்கள் ஆய்வில் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரை மாதிரிகளிலும் கணிசமான அளவு மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மனித ஆரோக்கியத்தில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் நீண்டகால உடல்நல பாதிப்புகள் பற்றிய அவசர, விரிவான ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுக்கிறது.'என்றனர்.
மைக்ரோபிளாஸ்டிக் என்பது உலகளாவிய கவலையாக உள்ளது, ஏனெனில் அவை ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உணவு, நீர் மற்றும் காற்று மூலம் மனித உடலில் நுழையும்.
மனித உறுப்புகளான, நுரையீரல், இதயம் மற்றும் தாய்ப்பால், அதோடு பிறக்காத குழந்தைகளிலும் கூட மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது கண்டறிந்துள்ளது.
சராசரியாக ஒரு இந்தியர் ஒவ்வொரு நாளும் 10.98 கிராம் உப்பு மற்றும் சுமார் 10 ஸ்பூன் சர்க்கரை உட்கொள்வதைக் கண்டறிந்துள்ளனர் . இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை விட மிக அதிகமாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.