ADDED : நவ 12, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்து நெரிசல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட இருக்கும் உலக போக்குவரத்து தினத்தை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், காற்று மாசுபடுவதை தவிர்க்கவும், பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
பொதுப் போக்குவரத்திற்கு 50 சதவீத ஐ.டி., ஊழியர்கள், மாறினாலே பெங்களூரில் 20 சதவீத போக்குவரத்து நெரிசல் குறையும் என கூறப்படுகிறது. பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா கூறுகையில், ''மூத்த போலீஸ் அதிகாரிகள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி மக்களை ஊக்குவிக்குமாறும், பொதுமக்கள் குறுகிய துாரத்திற்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லலாம்,'' என அறிவுறுத்தி உள்ளார்.