தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மேகதாது விவகாரத்தில் பேசி முடிவெடுங்க!: டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் அறிவுரை

மேகதாது விவகாரத்தில் பேசி முடிவெடுங்க!: டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் அறிவுரை

மேகதாது விவகாரத்தில் பேசி முடிவெடுங்க!: டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் அறிவுரை


ADDED : ஜூலை 31, 2024 02:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2024 02:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா மாநிலங்கள் அமர்ந்து பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ,9 ஆயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்கு ஒப்புதல் தருமாறு மத்திய அரசுக்கு கர்நாடகா அனுமதி கேட்டுள்ளது. ஆனால் அனுமதி தரக்கூடாது என தமிழக அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இன்று (ஜூலை 31) பிரதமர் மோடியை நேரில் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், 'மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்' என வலியுறுத்தினார். அப்போது, 'மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். தமிழகமும், கர்நாடகாவும் பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும்' என பிரதமர் மோடி, சிவகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us