தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/உலக சவால்களுக்கு தீர்வு தரும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இந்தியாவின் இலக்கு; பிரதமர் மோடி

உலக சவால்களுக்கு தீர்வு தரும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இந்தியாவின் இலக்கு; பிரதமர் மோடி

உலக சவால்களுக்கு தீர்வு தரும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இந்தியாவின் இலக்கு; பிரதமர் மோடி

1


ADDED : அக் 27, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : அக் 27, 2026 08:33 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: உலகளாவிய சவால்களுக்கு தீர்வு தரும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இந்தியாவின் இலக்கு என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டை பிரதமர் மோடி டில்லியில் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

தற்போது வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரத்துறையையும், வேளாண்துறையையும் மாற்றி அமைக்கும். கல்வி, வேலைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். நம் நாட்டில் இத்தகைய விஷயங்களுக்கு ஸ்டார்ட் அப் வழியாக முன்னுரிமை அளிப்பது மகிழ்ச்சி தருகிறது.

மூளையின் செயல்பாட்டை அறியும் தொழில்நுட்ப பணிகளில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கம்பியில்லா இணைப்பு மற்றும் செயற்கை கோள் வழியாக தகவல் தொடர்புகளில் தீர்வுகளை கண்டு வருகின்றன.

ஒரு குறிப்பிட்ட உணவுத் தேவைகளை கருத்தில் கொண்டு, அது தொடர்பான தயாரிப்புகள், ஊட்டச்சத்து துறையில் தயாரிக்கப்படுகின்றன. செமி கண்டக்டர் துறையில், இந்திய நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றன. தொழிற்சாலை கழிவுகளை பயன்படுத்துவதற்கான தீர்வுகள் பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை ஐஐடியில் ஒரு அதிநவீன மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தேன். இந்த மையம், உலகத்தரத்துக்கு ஈடாக மூளையின் கட்டமைப்பை, செயல்பாட்டை ஆராயும் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. மனித மூளையின் முப்பரிமாண டிஜிட்டல் படங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டம் வெற்றி பெற்றால் மூளை தொடர்பான பல்வேறு நோய்களில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us