
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில், 75வது அரசியலமைப்பு நாள் மற்றும் சட்ட நாள் விழா பா.ஜ., தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
பா.ஜ.க., வழக்கறிஞர் பிரிவு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மாநில செயலாளர் வெற்றி செல்வம், கல்வியாளர் பிரிவு தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் சட்ட நாள் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள், கல்வியாளர் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வழக்கறிஞர், கல்வியாளர் பிரிவினர் செய்திருந்தனர்.

