தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஞாயிறு அட்டவணையில் மெட்ரோ ரயில் இயக்கம்

ஞாயிறு அட்டவணையில் மெட்ரோ ரயில் இயக்கம்

ஞாயிறு அட்டவணையில் மெட்ரோ ரயில் இயக்கம்


ADDED : ஜன 14, 2025 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 12:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, பொங்கல் பண்டிகை, இன்று முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில், ஞாயிறு அட்டவணைப்படி, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அதாவது, காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஏழு நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும், ரயில்கள் இயக்கப்படும்.

சனிக்கிழமை அட்டவணை


வரும் 17ம் தேதி, சனிக்கிழமை அட்டவணைப்படி, அதாவது, காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஆறு நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை; காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை; இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை, 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பயணியர் தேவை அடிப்படையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us