/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராம சாலைகள் இணையும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் எரியாத விளக்குகள்
/
கிராம சாலைகள் இணையும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் எரியாத விளக்குகள்
கிராம சாலைகள் இணையும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் எரியாத விளக்குகள்
கிராம சாலைகள் இணையும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் எரியாத விளக்குகள்
ADDED : நவ 14, 2024 07:14 AM
கரூர்: கரூர் அருகே விபத்துகளை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைகளில், அமைக்கப்பட்ட ஒளிரும் மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் கிராம இணைப்பு சாலைகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கரூரில் இருந்து சேலம், திருச்சி மற்றும் மதுரைக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதில், வாகனங்கள் குறைந்தப்பட்சம் மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் சென்று வருகின்றன. நெடுஞ்சா-லைகளில் அடிக்கடி விபத்துகள்
ஏற்பட்டு, உயிரிழப்புகளும் அதி-கரிக்கிறது.குறிப்பாக, கிராமங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையும் சாலையில், விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், அப்பகுதியினர் இணைப்பு சாலை பகுதியில் குகை வழிப்பாதை அல்லது மேம்பாலம் கட்ட
வேண்டும் என சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். கரூர் மாவட்டத்தில், சேலம் சாலையில் மண்மங்கலம், மதுரை சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு, திருச்சி சாலையில் வீரராக்-கியம் பிரிவு,
கோடங்கிப்பட்டி ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.அதை தடுக்கும் வகையில், கிராம சாலை இணையும் பகுதியில், விபத்துகளை தவிர்க்க, சோலார் அமைப்புடன், 24 மணி நேரம் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கரூர்-திருச்சி சாலை தொழிற் பேட்டை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள, ஒளிரும் விளக்குகள் கடந்த, சில நாட்களாக எரியாமல் உள்ளன. இதனால், அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கரூர்-திருச்சி சாலை தொழிற்பேட்டை பிரிவில் ஒளிரும் விளக்குகளை, எரிய வைக்கும் வகையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.