/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் போராட முடிவு 16 ஆண்டுகளாக அரசாணையை அமல்படுத்தாததால்
/
நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் போராட முடிவு 16 ஆண்டுகளாக அரசாணையை அமல்படுத்தாததால்
நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் போராட முடிவு 16 ஆண்டுகளாக அரசாணையை அமல்படுத்தாததால்
நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் போராட முடிவு 16 ஆண்டுகளாக அரசாணையை அமல்படுத்தாததால்
ADDED : ஏப் 25, 2025 06:45 AM
மதுரை: நெடுஞ்சாலைத் துறையில் நேரடி நியமனம் பெறும் தொழில்நுட்ப சாலை ஆய்வாளர்களுக்கு 6வது ஊதியக்குழு பரிந்துரையை மாற்றி அரசாணை பிறப்பித்தும் 16 ஆண்டுகளாக அமல்படுத்தாததால் போராட்ட முடிவுக்கு தயாராகி வருகின்றனர்.
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் நேரடி நியமனசாலை ஆய்வாளர்கள் (தொழில்நுட்பம்), பதவி உயர்வில் வரும் சாலை ஆய்வாளர்கள் என இருதரப்பினர் பணியாற்றி வருகின்றனர். தொழில்நுட்பசாலை ஆய்வாளர்கள்ஆயிரம் பேர், பதவி உயர்வு சாலை ஆய்வாளர்கள் 300 பேர் வரை உள்ளனர்.
2006ல் உருவான ஆறாவது ஊதியக்குழுவில் இருதரப்பு சாலை ஆய்வாளர்களுக்கும் ஒரே மாதிரி தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இதனை மாற்றி தொழில்நுட்ப ஆய்வாளர்களுக்கு ஒரு நிலை உயர்த்தி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து குழு அமைத்து, அறிக்கை பெற்று 2010 ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி தொழில்நுட்ப சாலை ஆய்வாளர்களுக்கு ஒரு நிலை உயர்வாக வைத்து ஊதியம் வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.
இருப்பினும் அதனை அமல்படுத்தாமல் 16 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறை இயக்குனர்அலுவலகம் தாமதப்படுத்தி வருகிறது. இருதரப்பு சாலை ஆய்வாளருக்கும் ஒரே மாதிரி ஊதியம் பின்பற்றப்படுவதால் நேரடி சாலை ஆய்வாளர்களுக்கு அடுத்த பதவி உயர்வு தாமதமாகிறது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் (தொழில்நுட்பம்) சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார் கூறியதாவது:
ஊதியக்குழு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது. ஆறாவது ஊதியக்குழுவில் பரிந்துரை வழங்கப்பட்டது. தற்போது 8 வது ஊதியக்குழு வந்துவிட்டது. இருப்பினும் எங்களுக்கான பரிந்துரை ஏற்கப்படவில்லை. மே 27 ல் சென்னை முதன்மை இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம் என்றார்.