ADDED : ஜன 04, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் 'தோசை முதல் குவாண்டம் கணினி வரை நானோவின் பயணம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். மாணவி மிருதுபாஷினி வரவேற்றார். சுயநிதிப் பிரிவு முதுநிலை இயற்பியல் துறை தலைவர் நித்யா அறிமுக உரையாற்றினார். தியாகராஜர் பொறியியல் கல்லுாரி இயற்பியல் துறை பேராசிரியர் மகேந்திரன் பேசினார். மாணவர் பொன்ராஜ் நன்றி கூறினார். மாணவி குருகாவியா தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர் சங்கரநாராயணன் ஒருங்கிணைத்தார்.
