தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 34வது குழந்தைகள் அறிவியல் மாநாடு

 34வது குழந்தைகள் அறிவியல் மாநாடு

 34வது குழந்தைகள் அறிவியல் மாநாடு


ADDED : நவ 12, 2025 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுாரில் நடந்த, 34வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், 150 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

கூடலுாரில், ஜி.டி.எம்.ஓ., மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 'நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை' என்ற தலைப்பில், மாவட்ட அளவிலான, 34வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.

மாவட்ட செயலாளர் மணிவாசகம் வரவேற்றார். மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், பள்ளி தாளாளர் அப்துல் பாரிஹாஜி ஆகியோர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

தொடர்ந்து, 'நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை' என்ற தலைப்பில் 34வது அறிவியல் மாநாடு துவங்கியது. அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது பாதுஷா மேலிட பார்வையாளராக பங்கேற்றார்.

கூடலுார் அரசு கல்லுாரி இயற்பியல் துறை தலைவர் அர்ஜுணன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் மாநாடு குறித்து விளக்கினர். தொடர்ந்து, அரசு கல்லுாரி பேராசிரியர்கள் முன்னிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் சார்பில், 150 ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த கட்டுரைகளில் இருந்து, மண்டல அளவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்கான ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், அறிவியல் மாநில கருத்தாளர் ராஜு, பள்ளி நிர்வாக அதிகாரி அப்துல் சலாம், அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் பரமேஸ்வரன், இணைச் செயலாளர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us