கிராமப்புற பெண்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி
கிராமப்புற பெண்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி
ADDED : ஏப் 03, 2026 10:13 PM
சாயல்குடி: சாயல்குடி அருகே வேம்பாரில் இயங்கி வரும் பேடு தொண்டு நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பெண்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டம் (ஏ.ஐ) மூலமாக பத்தாயிரம் கிராமப்புற பெண்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சியளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சியை கல்லுாரி மற்றும் கிராமப்புறங்களில் அளிக்க உள்ளனர். பயிற்சி திட்டம் ஏ.வி.பி.என்., கூகுள், ஓ.ஆர்.ஜி மற்றும் ஏசியன் டெவலப்மென்ட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
பயிற்சி 2 முதல் 3 நாட்கள் கொண்டதாக உள்ளது. செயற்கை நுண்ணறிவின் அடிப்படை அறிவு அதன் நடைமுறை பயன்பாடுகள் மற்றும் தினசரி வாழ்க்கை தொழில்களில் பயன்படுத்த முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ராமநாதபுரம் துாத்துக்குடி மாவட்டங்களில் நடக்கும் இந்த பயிற்சிகளில் விவசாயிகள், மீனவ தொழிலாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
குறிப்பாக பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு புதிய டிஜிட்டல் திறன்களை கற்றுக் கொள்ளலாம். விவசாயத்தில் கால நிலை பயிர் நோய்களை கண்டறிதல், மாணவர்களுக்கு கல்வி உதவி, சிறு தொழில்களுக்கு விளம்பர உள்ளடக்கம் போன்ற நடைமுறை பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது என பேடு நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
--
