UPDATED : ஜூன் 13, 2026 08:09 PM
ADDED : ஜூன் 13, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
தேனி:பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி, ஈ.டி.ஐ.ஐ.,தோட்டக்கலை பிசினஸ் இன்குபேஷன் போரம் சார்பில் சின்னமனுார் முல்லையாறு உழவர் உற்பத்தி நிறுவனத்தில் வேளாண் தொழில் நுட்ப செயல் விளக்கப்பயிற்சி வகுப்பு நடந்தது. நபார் வங்கி மேலாளர் ராபின்சன்ராஜா தலைமை வகித்தார்.
பெரியகுளம் ஈ.டி.ஐ.ஐ., முதன்மை செயல் அலுவலர் வசந்தன் முன்னிலை வகித்தார். வேளாண் ஆராய்ச்சியாளர் செல்வ விநாயகம் நவீன கருவிகள் அவற்றின் பயன்பாடு பற்றி விளக்கினார். கருவி மூலம் மண் பரிசோதனை செய்வது பற்றி விளக்கம் அளித்தார். பயிற்சியில் அரசு மானியத்திட்டங்கள், மண்ணில் ஊட்டச்சத்துகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கப்பட்டது.
