/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டாலர்' சிட்டியில் 'டல்லடிக்கும்' ரோடுகள்
/
'டாலர்' சிட்டியில் 'டல்லடிக்கும்' ரோடுகள்
ADDED : நவ 20, 2024 11:16 PM
திருப்பூர்; திருப்பூரின் பிரதான ரோடுகளில், தெரு விளக்குகள் ஒளிராமல் இருப்பதால், பயணிகள் மற்றும் பாதசாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லுார் மெயின்ரோட்டில் இருந்து முத்தணம்பாளையம் மற்றும் அங்குள்ள அங்காளம்மன் கோவில் பகுதியில் தெரு விளக்குகள் ஒளிராததால் அப்பகுதி முழுக்க இருளில் மூழ்கியிருக்கிறது.
பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், அவதியுறுகின்றனர். அதே போன்று, காங்கயம் ரோட்டில் நல்லுார் வரை, ரோட்டின் இரு புறமும் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்கு, சென்டர் மீடியன்களில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் ஒளிர்வதில்லை எனவும், வாகன ஓட்டிகள் குறைபட்டுக்கொள்கின்றனர்.
திருப்பூர் தலைமை தபால் நிலையம் துவங்கி, ஊத்துக்குளி ரோட்டில் கூலிபாளையம் நால்ரோடு வரையிலும் ரோட்டின், இடது, வலது மற்றும் சென்டர் மீடியனில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் ஒளிர்வதில்லை. கருவம்பாளையம் ஏ.பி.டி., ரோடு இறக்கம் துவங்கி, உழவர் சந்தை வரை செல்லும் சாலையில் உள்ள தெரு விளக்குகளும் ஒளிர்வதில்லை என, அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
'சம்மந்தப்பட்ட துறையினர், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்வலியுறுத்தியுள்ளனர்.