ADDED : பிப் 14, 2026 04:06 AM

வானுார்: நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சீர்குலைத்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் தி.மு.க., அரசை கண்டித்து நேற்று வானுார் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சிற்றம்பலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், துணைச் செயலாளர் கணசேன்.
மாவட்ட ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், மண்டல ஐ.டி., பிரிவு இணைச் செயலாளர் எழில்ராஜ், மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேந்தன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள்.
இணைச் செயலாளர் சந்தியா, கவுன்சிலர் பிரகாஷ், மாவட்ட பா.ஜ., பொதுச்செயலாளர் ராஜசேகர், அ.ம.மு.க., அமைப்பு செயலாளர் கணபதி, வடக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பா.ம.க., மாவட்ட தலைவர் சங்கர்.
ஒன்றிய செயலாளர்கள் ரகு, மகாலிங்கம், அ.தி.மு.க., அணி செயலாளர்கள் குணசேகரன், கார்த்திகேயன், வீரப்பன், பாலகிருஷ்ணன், ஆறுமுகம், ஜெகன், சுமன், மாலா, சிவரஞ்சினி, ஜெய்பீம் உட்பட பலர் பங்கேற்றனர்.

