/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில், சாராய சோதனையில் தீவிரம் அதிரடி காட்டும் மதுவிலக்கு போலீசார்
/
மதுபாட்டில், சாராய சோதனையில் தீவிரம் அதிரடி காட்டும் மதுவிலக்கு போலீசார்
மதுபாட்டில், சாராய சோதனையில் தீவிரம் அதிரடி காட்டும் மதுவிலக்கு போலீசார்
மதுபாட்டில், சாராய சோதனையில் தீவிரம் அதிரடி காட்டும் மதுவிலக்கு போலீசார்
ADDED : ஏப் 29, 2025 06:34 AM
கடந்தாண்டு கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்த 6 பெண்கள் உட்பட 67 பேர் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி., முதல், போலீசார் வரை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயம், மதுபாட்டில்கள் கடத்தப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டது.
இதில், புதுச்சேரியையொட்டியுள்ள கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவில் புதிய இன்ஸ்பெக்டராக மீனா என்பவர் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் பட்டானுார், கிளியனுார் மதுவிலக்கு சோதனைச்சாவடிகள், இ.சி.ஆரில் பெரிய முதலியார்சாவடி, கீழ்புத்துப்பட்டு மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த சோதனைகள் மட்டுமின்றி மதுவிலக்கு பிரிவு ஸ்பெஷல் டீம் தனித்தனியாக நடத்தும் சோதனைகளில் அடிக்கடி புதுச்சேரி மதுபாட்டில்கள், சாராயம் கடத்துவோர் சிக்கி வருகின்றனர். தினமும் ஓரிரு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மது கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள், புதுச்சேரி பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு சக்கர வாகனங்கள், கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சாராயம், மது பாட்டில்கள் கடத்துவோரை போலீசார் பிடித்து விசாரிக்கும் போது, புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திச் சென்று தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்க்கும் வியாபாரிகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
மது பாட்டில்கள் கடத்துவோரில் ஒரு சிலர் உறவினர்களின் திருமணம், காதணி விழா, பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும், நண்பர்களுக்கு விருந்தளிக்க கடத்தி செல்வதும் தெரிய வருகிறது. சாராயம், மதுபாட்டில்கள் கடத்தப்படுவதைத் தடுக்க கோட்டக்குப்பம் போலீசார் தீவிரம் காட்டி வருவதால் சாராய வியாபாரிகள் 'கிலி'யில் உள்ளனர்.