தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பயனற்ற இடங்களில் உயர் மின்விளக்குகள் நிழற்குடைகளால் நிதி வீணடிப்பு

பயனற்ற இடங்களில் உயர் மின்விளக்குகள் நிழற்குடைகளால் நிதி வீணடிப்பு

பயனற்ற இடங்களில் உயர் மின்விளக்குகள் நிழற்குடைகளால் நிதி வீணடிப்பு


UPDATED : ஜூன் 08, 2025 07:13 AM

ADDED : ஜூன் 08, 2025 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2025 07:13 AM ADDED : ஜூன் 08, 2025 05:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாவட்டத்தில் உள்ள எம்.பி.,எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளி கட்டடங்கள், பேவர் பிளாக் ரோடுகள், குடிநீர் தொட்டிகள், பயணியர் நிழற்குடை அமைத்தல் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நகராட்சி பகுதிகள் முதல் கிராமங்கள் வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை நான்கு வழி சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில சாலைகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளது. இப்பகுதி மக்களுக்காக பஸ் நிறுத்தங்களில் பல இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவைகள் சேதமடைந்து பயன்படுத்த பட முடியாத நிலையில் காணப்படுகிறது. பல இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால் இத்தகைய நிழற்குடைகளை பயன்படுத்துவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். இவற்றை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடும் பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு நிதிகள் மூலமும், எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் நிதியிலும் கட்டப்படுகிறது.

ஆனால் இத்தகைய நிழற்குடைகள் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் அவசியமான இடத்தில் கட்டப்படுவதில்லை. இதனால் அத்தகைய நிழற்குடைகள் கட்டியும் மக்களுக்கு பயன்படாத நிலையே காணப்படுகிறது.

நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நகராட்சி சார்பில் எல்.இ. டி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படுகிறது.

கிருஷ்ணன் கோவிலில் இருந்து ராஜபாளையம் வரை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்த உயர்மின் கோபுர விளக்குகளை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்றுக்கொள்ளாமல் காலதாமதம் செய்வதால் அவைகள் பயனற்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் அதன் அருகில் எம்.எல்.ஏ.,.தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் தற்போது எம்.பி., தொகுதி நிதியின் கீழ் நகரில் பல்வேறு இடங்களில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அதே நேரம் நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களுக்கான சந்திப்பு ரோடுகளில் எந்தவித மின்விளக்குகளும் இல்லாமல் இருண்ட நிலை காணப்படுகிறது. இதனால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, எம்.பி.,எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பயணியர் நிழற்குடைகளும், உயர்மின் கோபுர விளக்குகளும் மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us