தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மனித மூளைத்தண்டு தரவு தளம் வெளியீடு

 மனித மூளைத்தண்டு தரவு தளம் வெளியீடு

 மனித மூளைத்தண்டு தரவு தளம் வெளியீடு


ADDED : ஜூன் 09, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில், கடந்த மூன்று நாட்களாக பிரிக்ஸ் நரம்பியல் மருத்துவ மாநாடு நடந்தது. சீனா, ரஷ்யாவை தொடர்ந்து, நம் நாட்டில் நடந்த இம்மாநாட்டை, சென்னை ஐ.ஐ.டி.,யின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மருத்துவ மையம் ஏற்பாடு செய்தது.

இதில், பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி நரம்பியல் வல்லுனர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று, மூளையின் கட்டமைப்பு, நரம்பியல் குறைபாடுகளை சரி செய்வதற்கான தொழில்நுட்பங்கள், மருத்துவ தீர்வுகள் குறித்து விவாதித்தனர்.

சென்னை ஐ.ஐ.டி., சுதா கோபாலகிருஷ்ணன் மையத்தால் உருவாக்கப்பட்ட மனித மூளைத்தண்டு வரைபடம் எனும் தரவு தளம் வெளியிடப்பட்டது.

இதில், மூளையின் செல் அமைப்பு, மூலக்கூறு வடிவமைப்பு, செயல்பாடுகள் உள்ளிட்ட நுணு க்கமான தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில், மத்திய அறிவியல் மையத்தின் முதன்மை ஆலோசகர் அஜய்குமார் சூட், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, சர்வதேச நரம்பியல் வல்லுனர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us