மூன்று ஏ.ஐ., படிப்புகள் சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம்
மூன்று ஏ.ஐ., படிப்புகள் சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம்
ADDED : ஏப் 24, 2026 09:13 PM
சென்னை: அனைவருக்கும் ஐ.ஐ.டி., திட்டத்தின் கீழ், 'ஸ்வயம்' தளத்தில், புதிதாக மூன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பாடங்களை, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யின், 'டிஜிட்டல்' கற்றல் தளமான, 'ஸ்வயம் பிளஸ்' மற்றும் சென்னை ஐ.ஐ.டி., 'பிரவர்தக்' இணைந்து, 'அனைவருக்கும் ஐ.ஐ.டி.,' எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி, இயற்பியல், வேதியியல், கணக்கியல், கிரிக்கெட் பகுப்பாய்வு தொடர்பாக, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப குறுகிய கால பாடங்கள், ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இப் போது, வளர்ந்து வரும் இன்ஜினியர்களுக் கான செயற்கை நுண்ணறிவு திறன்; மேலாண்மை அதிகாரிகளுக்கான செயற்கை நுண்ணறிவு; ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் ஆகிய மூன்று துறை களுக்கான ஏ.ஐ., பாடங்களை, சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய படிப்புகளுக்கு, மே 10ம் தேதி வரை, https://swayam-plus.swayam2.ac.in/ என்ற இணையதளத்தில், மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்யலாம்.
