தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மயிலாடுதுறையில் திருமாவளவனுக்கு பிடிவாரன்ட்: நீதிமன்றம் உத்தரவு

மயிலாடுதுறையில் திருமாவளவனுக்கு பிடிவாரன்ட்: நீதிமன்றம் உத்தரவு

மயிலாடுதுறையில் திருமாவளவனுக்கு பிடிவாரன்ட்: நீதிமன்றம் உத்தரவு


UPDATED : ஜூலை 31, 2024 12:49 PM

ADDED : ஜூலை 31, 2024 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2024 12:49 PM ADDED : ஜூலை 31, 2024 12:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடந்த பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது.

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003-ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து பேரணி நடந்தது. இதில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, வழக்கு தொடர்பாக திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us