PUBLISHED ON : பிப் 15, 2026

பள்ளி: நிழல் போர்த்தும் 3,000 மரங்கள்; ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 740 மாணவர்கள்; வாள் சண்டையில் மாநில அளவிலும், டேபிள் டென்னிஸில் மாவட்ட அளவிலும் மாணவர்களை சாதிக்க வைத்திருக்கும் இப்பள்ளியில், மூலிகைப் பண்ணை, காய்கறித் தோட்டம் இருக்கிறது; மாணவர்கள் விளைவிக்கும் காய்கறிகள் சத்துணவுக்கு பயன்படுகின்றன!
'சக்தி மசாலா' நிறுவனர் பி.சி.துரைசாமி; கோவை கே.எம்.சி., மருத்துவமனை தலைவர் நல்லா ஜி.பழனிசாமி; கி.விஜயகுமார் ஐ.பி.எஸ்., மற்றும் மஹாராஷ்டிராவில் பணியாற்றும் ராமசாமி ஐ.ஏ.எஸ்.; இவர்கள்...
ஈரோடு பெருந்துறையில் உள்ள இந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்!
பெருமை: 'பிளஸ் 1 பயில இப்பள்ளிக்கு வந்தேன். 'கட்டட தொழிலாளர்களான பெற்றோர் எதிரில் வேளாண் அதிகாரியாக நிற்க வேண்டும்' எனும் கனவை எனக்குள் விதைத்து இருக்கிறது இப்பள்ளி. இதோ... பள்ளி வளாகத்தில் என் பராமரிப்பில் இருக்கும் இந்த ஐந்து மரங்கள் எனக்குள் நேர்மறை உணர்வை வளர்த்திருக்கின்றன!'
- மு.கவியரசு, பிளஸ் 2.
ஒரு கோரிக்கை: 'பயனில்லாத பத்து நெகிழி பை சேகரித்து தரும் மாணவருக்கு பொரி உருண்டை தரும் நாங்கள், ஆண்டுக்கு மூன்று பழச்செடிகளை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை 'பசுமை நேயர்கள்' ஆக்குகிறோம். வளாக அல்லி குளத்தை விரிவுபடுத்தி வேலி அமைத்து தந்தால் மாணவர் களுக்கு ' மீன் வளர்ப்பு' பயிற்சி அளிக்க வசதியாக இருக்கும்!'
- செ.கந்தன், வேளாண்மை ஆசிரியர்.

