PUBLISHED ON : மார் 08, 2026

தனியார் பள்ளிகளைப் போல் வாரம் ஒருநாள் 'ஹவுஸ் யூனிபார்ம்' எனும் சீருடையை நடைமுறைப்படுத்தும் இது, போதிமரத்தை தன் இலச்சினையாகக் கொண்டிருக்கும் தஞ்சாவூர், அம்மா பேட்டை ஒன்றிய அன்னப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி
பள்ளி: உயர்நிலைப் பள்ளியாக 2011ல் தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில், மாணவர்களின் தன்னம்பிக்கை பெருக்கும் கலையரங்கம் இருக்கிறது. தலைமைப் பண்பு வளர்க்கும் மாதாந்திர வகுப்பு தலைவர்கள் கூட்டம்; 'டீ வித் டீச்சர்' எனும் ஆங்கில கலந்துரையாடல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இங்கு, 205 மாணவர்கள் திருப்தியோடு பயில்கின்றனர்.
பெருமை: 'சமீபத்திய மண்டல விளையாட்டு போட்டியில், 17 வயதிற்கு உட்பட்டோர் குண்டு எறிதலில் எனக்கு 3ம் இடம்; 'த்ரோபால்' அணியில் நான் கீ பிளேயர்; கடந்த தீபாவளியன்று அம்மாவிற்கு நான் புடவை பரிசளித்து அவர் ஆனந்த கண்ணீர் விட காரணமாக இருந்தது, என் பள்ளி எனக்குள் வளர்த்த சிறுசேமிப்பு பழக்கம்!'
இ.வைஷ்ணவி, 9ம் வகுப்பு
கோரிக்கை: 'நிரந்தர மைதானம் இல்லாத பள்ளி; அதனால் என்ன...
கிடைத்த நிலத்தில் வில்வித்தை, ஈட்டி எறிதல், இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ்
விளையாட்டுகளில் சிறப்பு பயிற்சி த ரு கிறோம். கலையரங்கம் அருகில்
ததும்பும் குளம் மட்டும் பயமுறுத்துகிறது; சுற்றுச்சுவர் எதிர்பார்த்து
காத்திருக்கிறோம்!'
த.வெங்கடாஜலபதி, தலைமை ஆசிரியர்.

