PUBLISHED ON : மே 31, 2026

திருவள்ளுவர் சிலை எங்களுக்கு வேண்டும்
'சிறார் திரைப்பட மன்றம் மற்றும் இலக்கிய மன்ற போட்டிகளில் மாவட்ட அளவில் சாதித்து, கள்ளக்குறிச்சியின் பெருமையாய் ஜொலிக்கிறது 2009ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இந்த அரசுப்பள்ளி!
பள்ளி: 1911ல் 'காந்தி காமராஜர் ஆரம்ப பள்ளி' என்பதாக துவக்கப்பட்டு, பின் சுருக்கமாக 'காகா பள்ளி' என்றழைக்கப்படும் இப்பள்ளி நுாற்றாண்டை கடந்திருக்கிறது; இது, திருக் கோவிலுார் நகராட்சி நடுநிலைப்பள்ளி. இங்கு பணியாற்றிய பலர் 'நல்லாசிரியர்' விருது பெற காரணமான இப்பள்ளி, தற்போதைய அறநிலையத் துறை செயலர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பல ஆளுமைகளை உருவாக்கி இருக்கிறது!
பெருமை: 'வட்டார, மாவட்ட அளவில் முதலிடம்; 'பசுமையும் பாரம்பரியமும்' தலைப்பில் 12 மூட்டை மணல் கொண்டு நான் உருவாக்கிய 'ஏர் உழவன்' மணல் சிற்பத்திற்கு மாநில அளவில் 2ம் இடம்; எனது இத் திறனுக்கு இப்பள்ளியே ஆதாரம்; என் கலைத் திறனை செதுக்கியது எங்கள் கலை ஆசிரியர் செல்வம்!'
கே.ஸ்ரீராம், 8 ம் வகுப்பு
கோரிக்கை: 'நற்பெயரும் புகழும் பெற்றுத் திகழும் எங்கள் பள்ளிக்கு பெயர்
பலகை வேண்டும். இதோடு, பள்ளி முகப்பில் 'நுாற்றாண்டு நினைவு வளைவு'
அமைத்தால் மிகச்சிறப்பு. கூடவே, 160 மாணவர்கள் கூடும் அளவிற்கு இறைவணக்க
கூட்ட மேடையும், திருவள்ளுவர் சிலையும் ஏற்படுத்தி தந்தால் பெரும்
மகிழ்ச்சி அடைவோம்!'
தலைமை ஆசிரியை கு.குமுதவல்லி
