PUBLISHED ON : ஆக 16, 2026

வெப்பத்தில் தகிக்கும் வகுப்புகள்
இப்பள்ளிக்கு என்று தனி மைதானம் இல்லை; ஆனாலும், 13 ஆண்டு களாக ஹாக்கியில்
தேசிய, மாநில அளவில் பதக்கங்கள் குவித்தும், தமிழக அணியில் தன் மாணவர்களை
இடம்பெறச் செய்தும் மார் தட்டுகிறது வேலுார், காட்பாடி, கார்ணாம்பட்டு அரசு
மேல்நிலைப் பள்ளி.
பள்ளி: கடந்த 1980ல் துவக்கப்பட்டு, 0.469 ஏக்கரில் இயங்கிவரும் இப்பள்ளியில் 272 மாணவர்கள் 336 மாணவியர் பயில்கின்றனர். உடற்கல்வி ஆசிரியர் மகேஷின் முயற்சியில் இரண்டு கி.மீ., தொலைவிலுள்ள மேய்ச்சல் நிலம் பள்ளியின் மைதானமாக, 2025ல் கைப்பந்து விளையாட்டிலும் இப்பள்ளி மாவட்ட அளவில் சாதித்திருக்கிறது!
பெருமை: 'தமிழ்நாடு ஹாக்கி அணிக்கு தேர்வாகி இருக்கும் காவ்யாஸ்ரீ அக்கா; தேசிய ஹாக்கி போட்டிகளுக்கு நடுவராகி ஜொலிக்கும் சோனியா அக்கா இருவரும் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவியர்; இவர்களைப் போலவே சாதித்து வரும் முன்னாள் மாணவ, மாணவியரின் வழியில் எங்களையும் தயார்படுத்துகிறது இப்பள்ளி!'
மகளிர் ஹாக்கி அணி வீராங்கனையர்
கோரிக்கை: 'சிதிலமடைந்த சுவர்களோடு இயங்கும் ஒரு வகுப்பறை;
கல்நார் கூரை வெப்பத்தில் இயங்கும் இரு வகுப்பறைகள் சீர்படுத்தப்பட
வேண்டும். ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும், போட்டிகளுக்கான பயணச்
செலவுகளுக்கு 'ஸ்பான்சர்ஷிப்' கிடைக்கவும் உரிய வழி பிறக்குமானால் அவை
எங்களுக்கு பெரிய அளவில் உத்வேகம் தரும்!'
கே.ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர்
