தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை

ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை

ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை


PUBLISHED ON : நவ 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உணவிடு அரசே இசைக்கும் பசிக்கும்

வழக்கமான கல்வி நிறுவனங்களுக்கு மாற்றல்ல இப்பள்ளி; எத்துறையில் இருப்போரது மனதையும் அழுத்தத்தில் இருந்தும் மீட்கும் இசை பயிற்றுவிக்கும் பள்ளி; தமிழக கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மயிலாடுதுறை, சீர்காழியில் செயல்படும் இம்மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு வயது 27.

பள்ளி: குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் என, ஏழு துறைகளோடு இயங்கும் இப்பள்ளியில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதி, 8ம் வகுப்பு; அதிகபட்ச வயது, 25. இதுவரை 500 கலைஞர்களை உருவாக்கி இருக்கும் இப்பள்ளி, 2023ம் ஆண்டு வரை, காலம் சென்ற தமிழிசை பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் இல்லத்தில் இயங்கி வந்தது. தற்போது, இங்கு 55 மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.



பெருமை:
'பாடகியாகும் ஆசையில் 'டிவி' இசை நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, கர்நாடக இசையில் எனக்குள்ள தடுமாற்றம் புரிந்தது. அதை சீராக்கியதோடு மட்டுமல்லாது, வயலின் இசைக்கவும், தேவாரம் பாடவும் கற்பித்து என் தகுதியை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது இப்பள்ளி. என்னை பின்பற்றி, நான் வசிக்கும் பகுதியில் இருந்து நான்கு தம்பிகள் இங்கு சேர்ந்துள்ளனர்!'

க.பிரியங்கா, வயலின் துறை மாணவி

கோரிக்கை: 'இங்கு பயிலும் மாணவ மாணவியரின் மதிய உணவுக்கான செலவை ஆசிரியர்களாகிய நாங்கள் தான் பங்கிட்டுக் கொள்கிறோம். பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல் படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தை எங்கள் பள்ளிக்கும் விரிவுபடுத்தினால், இன்னும் எங்களால் நிறைய எளிய குடும்பத்து மாணவர்களை ஈர்க்க முடியும்!'

பா.சுமதி, தலைமை ஆசிரியை

97516 74700

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us