தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/அருள்வான்

அருள்வான்

அருள்வான்


PUBLISHED ON : ஜூலை 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த வாரத்தின் ஜனநாயகன்

ஹீரோ, மாவட்ட ஆட்சியர்; அவர் கையில் வந்து சேரும் ஆதரவற்ற பெண் பிள்ளைக்கு தாயுள்ளத்தோடு தந்தையாக மாறும் அவர், தான் ஆட்சியர் எனினும் அரசு மருத்துவமனையிலேயே அவளுக்கு சிகிச்சை தருகிறார்; அரசுப்பள்ளியில் கல்வி தர முயல் கிறார்; 'ஆஹா... நிஜத்தில் மட்டுமல்ல... திரையிலும் 'மாற்றம்' துவங்கி விட்டது' என்கிறது திரைக்கதை!

கதையில் தாத்தாவை உயிராய் நேசிக்கிறாள் பேத்தி; இந்த பெரு, சிறு ஜீவன்களுக்கு இடையிலான பாச முத்தத்தை மேற்கு தொடர்ச்சி மலையும், அதனை உரசிப் போகும் மேக கூட்டங்களும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் படியாக ஆசை ஆசையாய் பணி செய்திருக்கிறது சுகுமாரின் சிலுசிலு ஒளிப்பதிவு!

மலைவாழ் பழங் கு டியினரை அவர்களது வாழ் விடத்தில் இருந்து அதிகார வர்க்கம் துரத்த முனையும் வழக்கமான கதை; 'ஆமாம்... ஆனால், நான் உடனிருந்து சிறப்பு அலங்காரம் செய்திருக்கிறேன்' என ஜி.வி. பிரகாஷின் இசை சொல்வது, மலையில் உலவும் காற்றைப் போல 100 சதவீதம் துாய்மையான உண்மை!

மலையில் சிறுமியொருத்தி பூப்பெய்த, இயற்கை உடன் இணைந்து அவளுக்கு அதிஅற்புதமாய் ஒரு சடங்கு; எதையும் மனதால் காணும் திறனும், இருந்த இடத்தில் இருந்தபடியே விரும்பும் இடத்தில் உலவித் திரும்பும் வரமும் பெற்றிருப்பின், அந்த குருத்தை ஈன்றவளது பூரிப்பு நமக்குள்ளும் நிச்சயம்!

காமம் துாண்டப்பட்ட கணம்; குட்டி மகள் குறுக்கே வந்துவிட, சட்டென்று 'தாய்மை' போர்வைக்குள் தன் உணர்ச்சி மறைத்து, தான் ஒளித்து வைத்ததை 'அப்புறமா...' என கணவனுக்கு கண்களால் கடத்தும் நடிப்பில், அய்யோடா... ரம்யா பாண்டியன்... ஜிவ்வ்வ்வ்!

லாரன்ஸ் கிேஷாரின் கச்சித படத்தொகுப்பு நாயகனுக்கான மகுடம். 'நான் இருக்கிறேன்' என மக்களிடம் அருள்நிதி சொல்கையில், தமிழகத்தின் தற்போதைய 'ஜனநாயகன்' நினைவிற்கு வந்து புன்னகைக்கிறார்! இது வரை சொல்லப்பட்ட பெண் பிள்ளை, பேத்தி, சிறுமி, குட்டிமகள் அனைத்துமாய் 'குறிஞ்சி' எனும் பொருத்தமான பெயர் கொண்ட பாத்திரத்தில் பேபி கிருத்திகா.

பீறிடும் கண்ணீராலும், உண்மை தரும் கடும் அழுத்தத்தாலும் க்ளை மாக்ஸில் தொண்டை அடைக் கிறது; இயக்குனர் கணேஷ் விநாயகன் வென்றிருக்கிறார்.

ஆக...

'சிறந்த படங்களை ரசிக்க மாட்டோம்' எனும் நம் ரசனை அடிப்படையில் இப்படம் கொண்டாடப்படாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us